ADDED : செப் 20, 2013 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வம் என்பது பொன்பொருளை மட்டும் குறிப்பதில்லை. அறிவும், ஒழுக்கமும் மனிதனுக்குத் தேவையான செல்வமே.
* செல்வம் தேடுவதற்கு பல வழிகளில் முயல்வது நியாயமானது தான் என்றாலும், அவரவர் தகுதிக்குரிய வழிகளில் தேடுவதே நல்லது.
* வாயால் சொல்லும் சொல்லுக்கு மகிமையில்லை. அந்தச் சொல், உள்ளத்துணிவை வெளிப்படுத்துமானால் அதற்கு ஆற்றல் உண்டு.
* உழைக்க மறுக்கும் ஏழை மட்டுமல்ல, பணம் படைத்தவர்களிலும் வயிறார சாப்பிட்டு தூங்கித் திரியும் சோம்பேறிகள் மாற வேண்டும்.
* சோம்பல் ஒன்று தான் இழிவானது. எப்போதும் தூங்க கும்பகர்ணனால் கூட முடியாது. அவனாலும் ஆறுமாத காலம் மட்டுமே தூங்க முடியும்.
* பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, எப்போதும் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
பாரதியார்